அறம் செய விரும்பு முதல், சக்கர நெறி நில் வரையிலான அவ்வையின் நீதி போதனைகளை, புனைப்புக் கதை வடிவில் சித்திரக் காட்சிகளுடன் எளிய நடையில் படைத்துள்ள ஆசிரியர் சக்திவேல் பாராட்டிற்குரியவர். கணினி மயமான இன்றைய வாழ்க்கைச் சூழலில், நன்னெறி புகட்டும் அறக் கருத்துகளை சிறார்களுக்கு வழங்கும் நல்ல வாழ்வியல் நுால் இது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. – த.பாலாஜி