இது ஆண்டாளின் கதை மட்டும் அல்ல! விஷ்ணுவின் அவதாரங்களையும் லீலைகளையும் உள்ளடக்கிய கதை தான் தமிழச்சி ஆண்டாள்.
ஆண்டாள் எங்கு, எப்படித் தோன்றினாள், அவளை வளர்த்த பெரியாழ்வார், அன்னை வீரராஜாதேவி யார் எனப் புராணங்களின் அடிப்படையிலும், வரலாற்றுச் சம்பவப் பின்னணியிலும் கோதை சூடிய பூக்களைப் போலவே அழகாகப் பின்னப்பட்டிருக்கிறது இந்தக் கதை.
‘திருப்பதிக்குச் சென்றால் ஏன் கோவிந்தா என்று அழைக்கிறோம்?’ என்பது ஒரு சிலருக்கே தெரியலாம் தவிர நிறைய பேருக்குத் தெரியாது. இது தொடர்பான ஒரு கதை கோதைக்கு சொல்வது போல் சொல்லப்பட்டிருக்கிறது.
சிறியவர், பெரியவர் என அனைவரும் படித்து இன்புறும் வகையில் நிறைய கதைகள் இதில் கூறப்பட்டுள்ளன. கோதை பேசும் பழங்காலச் சொற்களுக்கு பொருள் விளக்கமும் அடைப்புக்குறிகளில் கொடுக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு.