இன்றைய உலகிற்கு ஏற்ற விதை புத்தகங்கள். அந்த வகையில், ‘தேசத் தந்தை மகாத்மா காந்தி’ என்ற புத்தகம், இன்று மற்றும் நாளைய எதிர்கால மாணவர்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் இருக்கும்.
இப்புத்தகம் காந்தியடிகளின் பிறப்பு முதல், இறப்பு வரையில் உள்ள வாழ்க்கை வரலாறு, காந்தியடிகள் பெற்றோரின் நன்னடத்தையைப் பார்த்து, அதைப் போலவே தன்னுடைய வாழ்க்கை நெறிமுறைகளையும் அமைத்துக் கொண்டார்.
மகான் அவருடைய மனைவியை மதிப்பும், மரியாதையுடனும் நடத்தினார். அஹிம்சையின் மூலம் தன் வாழ்க்கையில் அனைத்தையும் சாதித்தவர்.
வார்த்தையில் பணிவும், நடையில் சுறுசுறுப்பும், தன் வேலைகளை தானே செய்து கொள்ளுதல் போன்ற பழக்க வழக்கங்களை வாழ்க்கையில் கடைப்பிடித்தவர்.
இன்றைய தலைமுறையினர் இப்புத்தகத்தில் உள்ள வரலாற்றுச் செய்தியை படிப்பதன் மூலம், அவர்களுடைய வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல், எதிர்கால சந்ததியினருக்கும் நல்லனவற்றை அறியலாம்.
– ஹேமா