நேதாஜியின் வாழ்க்கை, போராட்டம் நிறைந்தது. நாட்டுப்பற்று மிக்க அவர், ஆங்கிலேய அரசு தந்த கடுமையான சோதனைகளை பல கடந்து, பலமுறை சிறை சென்று, உடல் தளர்வுற்றாலும், உறுதி குறையாத துணிந்த நெஞ்சினராய் பிரிட்டீஸ் அரசை நிலைகுலைய வைத்த வரலாற்றை நாடு அறியும்.
போஸின் இளமைப் பருவம் துவங்கி, இறப்பு வரையிலான செய்திகள் வியப்பில் ஆழ்த்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது.கல்லுாரி வாழ்க்கை, அயலகக் கல்வி, ஆங்கில அரசின் கீழ் பணி செய்வதில் நாட்டமின்மை, சிறையில் இருந்தபோது உடல்நலிவையும் பொருட்படுத்தாது, இந்திய விடுதலைக்காக காட்டிய தீவிரம், காந்தியுடன் மாறுபட்ட விவாதங்கள், வெளிநாடு சென்று அயலக தலைவர்களை சந்தித்து படை திரட்டியது, அவர்களை பிரிட்டீஸ் அரசுக்கு எதிராகச் செயல்பட வைத்தது.
காங்கிரஸ் இயக்கத்தில் தலைவராக பணி, காந்தியை காட்டிலும் பிரிட்டிஷ் அரசுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தமை, இந்திய தேசிய ராணுவம் என்ற அமைப்பின் வழி ராணுவப் பயிற்சி அளித்தமை, சிங்கப்பூரில் இருந்தபடி, இந்திய அரசாங்கத்தை நிறுவி தனிக்கட்சி துவங்கி, தலைவராக விளங்கியமை, எதிர்பாராத விதமாக விமான விபத்தால் அகால மரணம் என செய்திகளை, விறுவிறுப்பான நடையில் எழுதியிருப்பது போற்றுதற்குரியது.
இந்நுாலை இந்திய ராணுவ வீரர்களில் ஒருவரான நுாலாசிரியரே எழுதியுள்ளதால், உண்மை தகவல்கள் தெரிய வருகின்றன.
–
ராம.குருநாதன்