மூன்று முதல் 12ம் நுாற்றாண்டு வரை பாடப்பெற்ற அருட்பாக்கள் பன்னிரு திருமுறை என, தொகுக்கப்பட்டுள்ளன.
பதினோரு திருமுறைப்பாடல்கள், ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தில், திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி என்ற ஆதிசைவ சிவாச்சாரியாரால் தொகுக்கப்பட்டது. ஒரு சைவ நெறிப் பெட்டகம். மூலச் செய்யுள்களைத் தொகுத்து ஒரே நூலாக வழங்கப்பட்டிருக்கிறது.
சங்க காலப்புலவர் நக்கீரர் பாடி, பத்துப்பாட்டில் தொகுக்கப்பட்ட திருமுருகாற்றுப்படையும் சேர்க்கப்பட்டுள்ளது. தேவாரம் என்று பெயர் வருவதற்கான குறிப்பும் நூலில் தரப்பட்டுள்ளது.
இலக்கண வரம்புகளுக்கு உட்பட்ட பல பாவகைகளால் இனிமை குன்றாமல் இயற்றப்பட்ட பன்னிரு திருமுறை, செந்தமிழ் புலமையையும், இறைவன் மீதான அர்ப்பணிப்பையும் பறைசாற்றுகின்றன. காலங்களைக் கடந்து ஒளிரும் தெய்வீக நூல்.
– மெய்ஞானி பிரபாகரபாபு