நட்பு பற்றி விரிவாக விளக்கியுள்ள நுால். குறள் கூறும் நட்பையும் கூறியுள்ளார். பாரதம், ராமாயண புராணம், வரலாறு, அரசியலில் நட்பு இணைகளை அழகுற படம் பிடித்துள்ளார்.
சில இடங்களில், நல்ல கதை படிப்பது போன்ற உணர்வு தோன்றுகிறது. கர்ணன் – துரியோதனன், ராமன் – குகன், ராஜா தேசிங்கு – தாவூத்கான், கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார், கார்ல்மார்க்ஸ் – பிரடெரிக் ஏங்கெல்ஸ், அதியமான் – அவ்வையார், பிடல் காஸ்ட்ரோ – சேகுவேரா என, நட்பில் இணையாக வாழ்ந்தவர்களை, வாழ்க்கை நிகழ்ச்சிகளோடு பொருத்தி விளக்கியுள்ளார்.
மணக்கோலம் களைந்து, நண்பன் தேசிங்கு ராஜனை மீட்கும் போரில் வெற்றி பெற்று, வஞ்சகனால் முதுகில் வாளால் குத்தப்பட்டு இறந்த தாவூத்கான் நட்பு மறக்க முடியாத ஒன்று.
இறுதிக் கட்டுரை, திருக்குறள், நாலடியார் காட்டும் நட்பு பற்றிய கருத்துகள் சிறப்பாக தொகுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் படித்துப் பயன் பெறத்தக்க நுால்.
– புலவர் ம.நா.சந்தானகிருஷ்ணன்