பழங்காலத்தில் வழிபடப்பட்ட கடவுளர்களையும், ஆட்சி செய்த அரச வம்சங்களையும், இடம்பெற்றிருந்த ஜாதி, மதங்களையும் தெரிந்து கொள்ள, இடப்பெயர்கள் பெரிதும் துணை செய்கின்றன.
கேரளத்தில் கிடைக்கப் பெற்ற, 1,000 கல்வெட்டுகளில் உள்ள, 1,600 இடப்பெயர்கள் ஆராயப்பட்டுள்ளன. இன்று காணப்படும் ஜாதிப் பெயர்களில் பல, இடப்பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இன்றைய நாயர் என்ற பெயர் இடம்பெறவில்லை. இதிலிருந்து இப்பெயர் பிற்கால வழக்கு என உணரலாம்.
கேரள வரலாற்றை அறிய, பழமையின் எச்சங்களாக கல்வெட்டுகள் அமைந்துள்ளன. கேரள பண்பாடு, வரலாறு, மொழி ஆய்வுகளுக்கு தமிழ் ஆதாரமாக உள்ளதை இந்நுாலால் அறியலாம். வரலாற்று ஆய்வாளர், மாணவர்களுக்கு நல்விருந்தாகும்.
–
கவிக்கோ ஞானச்செல்வன்