குறிக்கோளில் வெற்றி பெற மன உறுதி தான் முக்கிய தேவை. அது, பாதையை வகுத்து, பயணத்தை துாண்டும். இத்தகைய பண்பை பெறும் வழிமுறையை சொல்லும் நுால். பத்து தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது. தாழ்வு மனப்பான்மையை ஒழிப்பது பற்றி தனியாக விளக்கப்பட்டுள்ளது. சிறிய உதாரணங்கள் நிறைந்துள்ளன. மன உறுதி ஏற்பட்டு விட்டால், விடாமுயற்சி தொடர்ந்து வரும். முயற்சியால் செயல் கைகூடும். முன்னேற விரும்புவோருக்கு உதவும் எளிய நுால். – கிருஷ்ணவேணி