நீர் ஆதாரங்களை மேலாண்மை செய்வதிலும், பகிர்வதிலும் பல்லவ அரசின் தொழில் நுட்பத்தை, சோழ மன்னர்களும் பின்பற்றினர். சோழர்களின் நீர் மேலாண்மை குறித்து, ஆவணங்கள் துணை கொண்டு எழுதப்பட்ட நுால். ஆய்வரங்குகளில் விவாதிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு.
நீர் உரிமை, நீர்ப் பாசனம், நில விற்பனை, நிலக் கொடை, நீர் பராமரிப்பு வரிகள் போன்ற செய்திகள் கல்வெட்டு, செப்பேடுகளால் அறியப்படுகின்றன. நீர் ஆதாரங்களைப் பராமரிக்க, எச்சோறு குலைவெட்டி, குரப்புவெட்டி போன்ற வரிகள் வசூலித்த வரலாறும் உள்ளது. தலை மடையிலே நீர் பாயவும், கடை மடையிலே நீர் பெறவும் உரிமை தரப்பட்டிருந்தது.
கிணறு, ஏரி, குளம், வாய்க்கால், ஆறு, குமிழி உதவியால் நீர் மேலாண்மை செய்யப்பட்டு, சோழர் காலத்தில் நஞ்சையும் புஞ்சையும் பசுமை கொண்டிருந்ததை கண்முன் நிறுத்துகிறது.
– முனைவர் மா.கி.ரமணன்