மனித இன வரலாற்றை, மிக சுருக்கமாக கூறும் நுால். மிக எளிமையாக படைக்கப்பட்டுள்ளது. அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட தகவல்களை தொகுத்து கடித வடிவில், சிறுவர் – சிறுமியர் புரியும் வகையில், எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. பேரரசர் அக்பர் அவையில், மிக நுட்பமாக எழுப்பிய கேள்வியுடன் துவங்கி, ஜென் துறவியின் தன்னம்பிக்கை மேற்கோளுடன் முடிகிறது.
காடு மேடுகளில் உணவுக்காக அலைந்து திரிந்த மனித இனத்தின், வரலாற்று கால பிரிவினைகள் கோடிட்டு காட்டப்பட்டுள்ளன. தகவல்கள், அறிவியல் பூர்வமாக அலசப்பட்டுள்ளன. இலக்கியம், வரலாறு, தொல்லியல் போன்ற நிரூபிக்கப்பட்ட சான்றுகளுடன் பின்னப்பட்டுள்ளது.
மனித குலம் காலந்தோறும் சந்தித்த மாற்றங்களையும் கூறுகிறது. கால இயந்திரத்தில் அமர்ந்து, பல கோடி ஆண்டுகளை அசை போடும் முயற்சியாக அமைந்துள்ளது. வாசிப்பை துாண்டும் சுருக்கமான மானுடவியல் நுால்.
– அமுதன்