சோதிட அடிப்படையில் மனிதன் உடலைப் பற்றியும், அதில் உண்டாகும் நோய்கள், அதற்கான காரணம், தீர்வு குறித்து விரிவாகப் பேசும் நுால். உலகில் அனைத்து உயிர்களும் முட்டை, வேர்வை, விதை, வேர்க்கிழங்கு, கர்ப்பப்பை என, நான்கு வகையாக தோன்றுகிறது என்கிறார். உடல் உள்ளுறுப்பு பற்றியும் எடுத்துரைக்கிறார்.
நவ கிரகங்களைப் பற்றி விரிவாகக் கூறுகிறார். மனிதன் கருவில் உண்டாகும் போதே, கிரகம் ஆட்சி செலுத்தும் என்று கணிக்கிறார். அவை, எந்தெந்த நோய்க்குக் காரணமானவை என்று வகைப்படுத்துகிறார். அவற்றை இயற்கையாக குணப்படுத்துவதை எளிய முறையில் விளக்குகிறார்.
மனிதனுக்குத் தோன்றும் நோய்கள், அதற்கான உணவுப் பரிகாரம் கூறப்பட்டுள்ளது. ரத்தசோகை, சிறுநீரக வியாதி, நீரிழிவு நோய்களுக்கான சிகிச்சையையும் கூறியுள்ளார். ஆயுள் நீட்டிக்கப் பரிகாரங்கள், மருத்துவக் கோவில்கள் என, பல தகவல்களை உள்ளடக்கியுள்ளது இந்நுால்.
– முனைவர் இரா.பன்னிருகை வடிவேலன்