முகப்பு » அறிவியல் » நான் தான் கொவிட் – 19

நான் தான் கொவிட் – 19

விலைரூ.70

ஆசிரியர் : ப.க.பொன்னுசாமி

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: அறிவியல்

ISBN எண்:

Rating

பிடித்தவை
இது நடந்தது, 1960களில். சளியின் நீர்மத் துகள்களை மூன்று விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அப்போது, அவை ஒளிரும் வைர கிரீடம் போல மின்னியது. ஆய்வு முடிவில், 1965ல் கொரோனா என்ற பெயரை சூட்டினர்.
அப்போதிருந்து கொரோனா தொடர்கிறது என்ற ஆய்வை நம் முன் வைக்கிறார் பேராசிரியர் பொன்னுசாமி. இது முழுக்க அறிவியல் விளையாட்டு... மூலக்கூறு, புரதங்களின் தன்மையை புரிந்து கொண்டால் இந்த உண்மை விளங்கும். வைரஸ் தானாக வளர்ச்சியடையாது.
ஆனால், மனித செல்களுக்குள் நுழைந்து, அவற்றின் துணையால் வளர்ச்சியடையும் என்கிற அறிவியல் உண்மையை உணர்த்துகிறார். தடுப்பு மருந்துகளும் இதை அடிப்படையாக வைத்தே கண்டுபிடிக்கப்படுகின்றன.
அதனால் தான், மற்றவர்கள் மூலம் பரவும் என்பதால் முக கவசம் அணிவது, அடிக்கடி கைகளை கழுவுவது, இடைவெளி விட்டு பழகுவது போன்ற பழக்கங்களை கட்டாயமாக்க வேண்டியுள்ளது. அறிவியலை புரிந்து கொள்வதன் மூலம் நோய்களையும் தெரிந்து கொள்ளலாம் என்பதை கொரோனா வைரஸ் வழியாக உணர்த்துகிறார்.
எம்.எம்.ஜெ.,

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us