கதையை காட்சி வடிவில் கண்முன் நிறுத்துவதில் முக்கிய பங்காற்றுபவர் ஒளிப்பதிவாளர். இயற்கை வளங்கள், விலங்குகள், அவற்றின் உடல் அசைவுகள், குணாதிசயங்கள், மனிதர்களின் ஆசாபாசங்களை நுட்பமாக காட்டுவது, அந்த கலையின் பரிணாமம். ஒளிப்பதிவு கலை பற்றி பேசுகிறது.
‘மாஸ்டர்ஸ் ஆப் லைட்’ என்ற ஆங்கில நுாலின், தமிழாக்கம். கதை காட்சியை, ஒரு நாளில் எந்த நேரத்தில் எந்த ஒளியில் எடுத்தால் சிறப்பாக இருக்கும்; ஒளிப்பதிவாளருக்கு, ஓவியம் எப்படி உதவி செய்யும்; கேமரா நகர்வு எப்படி இருக்க வேண்டும் உள்ளிட்ட கேள்விகளுக்கு, பிரபல ஒளிப்பதிவாளர்களே நேர்காணல் முறையில் விடை சொல்கின்றனர்.
‘நகைச்சுவை, பயம் என, எதை சொல்கிறதோ, அதற்கு ஏற்ப செயல் திட்டத்தை மாற்றி கொள்ளும் பக்குவம் வேண் டும்...’ என்கிறார் ஒளிப்பதிவாளர் மரியோடாஸி. அழகியலை படம் பிடிக்க ஆர்வம் உள்ளோர் படிக்க வேண்டிய நுால்.
– டி.எஸ்.ராயன்