இந்தியாவின் தெற்கு பகுதியிலிருந்த விஜயநகரப் பேரரசின் சமூக அரசியல், பொருளாதார வளர்ச்சி எழுதப்பட்டுள்ளது. வரலாற்று நாவல் போன்றது எனலாம். பண்டைய வரலாற்று சிறப்புகளை அறிந்து கொள்ள, இத்தகைய நுால்கள் மிகவும் பயன்படும். விஜயநகர மன்னர்கள், நாயக்க அரசர்களோடு கொண்ட தொடர்புகள் மற்றும் மற்ற மன்னர்கள், சிற்றரசர்கள் பற்றியும் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. விஜயநகரப் பேரரசு ஆண்டதாக கூறியுள்ள, 14 – 17ம் நுாற்றாண்டு வரை உள்ள தமிழக வரலாறு கோர்வையாக சொல்லப்பட்டுள்ளது. – என்.எஸ்.,