வாழ்வியல் அம்சங்களை, மனித மனதில் புகுத்தும் கவிதை தொகுப்பு நுால். அழகியலை, மிக எளிய நடையில், சின்ன சின்ன கவிதைகளாக படைத்துள்ளார். சமகால சூழலை, நாலு வரிகளில், ‘நச்’ என்று பதிய வைக்கின்றன சில. நீர், நிலம், நெருப்பு, காற்று, வானம் என, சூழலியலை அழகிய வடிவில் பிரதிபலிக்கின்றன கவிதைகள்.
‘ஒரு கூழாங்கல்லை மணலாகச் செதுக்கும் வரை ஓய்வதில்லை நதி...’ என்கிறது ஒரு கவிதை. இப்படி, இயற்கை அனுபவங்களின் சாரம் கவிதைகளில் கொட்டி கிடக்கிறது. வாழத் துடிப்போருக்கு உற்சாகத்தை துாண்டும் நுால்.
– டி.எஸ்.ராயன்