தமிழ் சினிமாவில் புதிய நடைமாற்றத்தை வழங்கியவர் இயக்குனர் மகேந்திரன். வணிக சினிமா வந்தபோதும், திரைமொழி இலக்கியமாக மட்டுமே இருக்க வேண்டும் என உறுதியாக இருந்தவர். திரைப்படங்கள் மீது வைத்திருந்த காதலை, திரைத்துறையைச் சேர்ந்த, 56 பேர் எழுதி உள்ளனர்.
நடிகர் ராஜேஷ், ‘சிறு வயதில் இருந்தே நிறைய படிப்பார். கமர்சியல் சினிமாக்களை கேலி செய்வார். ஒரு ஆள், 10 பேரை துாக்கி அடிப்பது போன்ற காட்சியை பார்த்து சிரிப்பார்...
‘ஒரு நடிகர், களிமண்ணைப் போல் நெகிழ்ச்சி தன்மையோடு இருக்க வேண்டும்; கிரானைட் போல், கடினமாக இருக்கக்கூடாது. களிமண்ணில் தான், விதவிதமான உருவங்களை செய்ய முடியும் என்பார்...’ என்று எழுதியுள்ளார். சுவாரசியமான தகவல்கள் நிறைந்த நுால்.
– டி.எஸ்.ராயன்