கோவை புத்தகத் திருவிழாவில், பெண்கள் பங்கேற்று வாசித்தளித்த ஐம்பது கவிதைகளின் தொகுப்பு நுால். ஆணாதிக்கத்தை எதிர்க்கும் பெண் குரலாக வெளிப்படுகிறது. பெண் என்னும் பெருந்தவத்தின் மகிமைகளையும், வீறுணர்ச்சியின் வெளிப்பாட்டையும் ஆழமாக உணர்த்தும் கவிதைகள் அலங்கரிக்கின்றன. பெண்கள் எல்லாவித முன்னேற்றத்திற்கும், புரட்சிகர சிந்தனைக்கும் தயார்படுத்திக்கொள்ள வழிவகுக்கும்படியான கவிதைகள் வரவேற்புக்கு உரியன. – ராம.குருநாதன்