வேதத்தின் அந்தமான வேதாந்தம், ‘உபநிஷத்’ என்ற ஞானப் புதையலாக உள்ளது. பூமியில் தோண்டி புதையல் எடுப்பது மிகக் கடினம். அதைவிட இந்த அருட்புதையலை புரிந்து கொள்வது மகா கடினம்.
உபநிஷத்தை ஒரு நிமிஷத்தில் இந்நுால் புரிய வைக்கிறது. வடமொழியில் ஆழ்ந்த அறிவும், தமிழில் எடுத்துச் சொல்லும் அழகும், அறிவியல் பேராசிரியக் கண்ணோட்டமும் கொண்ட ஆசிரியரின், 102வது நுால் என்பது பாராட்டுக்கு உரியது.
ஆத்மா எது, உலகம் எது, கடவுள் யார், சொர்க்கம், நரகம், மோட்சங்கள் யாவை, மறுபிறப்பு எப்படி, மரணம் அடைந்த பின் உயிர் எங்கே போகிறது போன்ற வினாக்களுக்கு விடை அளித்து தெளியவைக்கிறது. கடைசி சுலோகங்களில் ஆத்மா பிரியும் போது நேரும் அனுபவங்களை கூறி வியக்க வைக்கிறார். ஆத்மாவின் சிறப்புகளை தெளிவாகக் கூறுகிறது.
– முனைவர் மா.கி.ரமணன்