காஞ்சி மஹா பெரியவரின், ‘தெய்வத்தின் குரல்’ புத்தகத்தின், ஏழு பிரிவுகளையும் படித்து, அதிலிருந்து சாராம்சம் எடுத்து, ‘நேர் கொண்ட பார்வை’ என சுருக்கித் தந்திருக்கிறார் ஆசிரியர். தினமும் என்னென்ன வழிமுறைகளை வாழ்வில் பின்பற்ற வேண்டும் என்பதை, இதைப் படித்தால் அறிந்து கொள்ளலாம்.
கூடவே, அன்றாடம் நாம் சொல்ல வேண்டிய சுலோகங்களையும், புத்தகத்தின் இறுதியில் கொடுத்திருக்கிறார். இவற்றைப் படித்தால் வாழ்வில் மேம்படலாம் என்றும் கூறுகிறார். ‘தெய்வத்தின் குரல்’ புத்தகங்களைப் படிக்க சந்தர்ப்பம் இல்லாதவர்கள், இந்தப் புத்தகத்தைப் படித்து பயனடையலாம்.
– மீனா குமாரி