வீட்டு நெறிப்பால், திருவருட்பால், தன்பால் என்னும் மூன்று பிரிவுகளுடன், 31 அதிகாரங்களைக் கொண்டுள்ளது அவ்வைக் குறள். அதிகாரத்துக்கு, 10 வீதம், 310 குறட்பாக்கள் அமைந்துள்ளன.
பதவுரை, கருத்துரை, விசேஷவுரை என்னும் மூன்று பிரிவுகளில் உரை வழங்கியுள்ளார். ஒவ்வொரு அதிகாரத்திற்கும் விளக்கம் வழங்கி உள்ளதோடு, மேற்கோளாகப் பட்டினத்தார், வள்ளலார் பாடல்களையும் வழங்கியுள்ளார்.
இந்தப் பாடல்களிலிருந்து உரையாசிரியரின் புலமை புலப்படுகிறது. திருவள்ளுவர் போல், அவ்வையாரும் குறட்பாக்களைப் படைத்துள்ளார் என்பதை இந்த நுால் உணர்த்துகிறது. இந்த உரை, 1939ல் முதல் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. அந்தக் காலத்திற்கு ஏற்ப மொழி நடை அமைந்துள்ளது.
– முகிலை ராசபாண்டியன்