தமிழகத்தில், 36 மாவட்டங்கள் குறித்த செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன. மாவட்ட பரப்பளவு, மக்கள்தொகை, லோக்சபா, சட்டசபை தொகுதிகள், வருவாய் கோட்டங்கள், வட்டங்கள், கிராமங்கள், மாநகராட்சி நகராட்சிகள் என, அனைத்து விபரங்களும் அமைந்துள்ளன.
கடந்த, 1956ல், 13 மாவட்டங்களாக இருந்த தமிழகம், 1966 முதல் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. புதிய மாவட்டங்கள் எந்த ஆண்டுகளில் உருவாக்கப்பட்டன என்ற தெளிவான விபரங்களும் உள்ளன.
‘சுப்ரீம் கோர்ட் ஆப் மெட்ராஸ்’ என துவக்கத்தில் இருந்தது, பின் ஆகஸ்ட் 15, 1862 முதல், ‘மெட்ராஸ் ஹைகோர்ட்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்ட செய்தியும் உள்ளது. மிகவும் பயனுள்ள நுால்.
– டாக்டர் கலியன் சம்பத்