சந்தக் கவிதைகளை உள்ளடக்கிய கவிதைத் தொகுப்பு நுால். பொதுவுடைமை, சமூக நீதி, சமூக அவலம், நீர் மேலாண்மை, விழிப்புணர்வு போன்ற கவிதைகளில் பொது நலப் பார்வையைக் காண முடிகிறது. இயற்கை, இல்லறம், தாய்மை, காதல் மற்றும் கையறு நிலை சார்ந்த கவிதைகளில் இதம் இழையோடுவதை உணர முடிகிறது. பொதுவான தலைப்புகளில் வரும் இசைப்பாடல்கள் மற்றும் தத்துவப் பாடல்களில் மனித நேயம் எதிரொலிக்கிறது. சில மழலைப் பாடல்கள் தாலாட்டுகின்றன. – மெய்ஞானி பிரபாகரபாபு