பாவேந்தர் பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு பெருங்காவியமாகப் படைக்கப்பட்டுள்ளது. ஐந்து காண்டங்கள், 1,384 பாடல்களில் அமைந்துள்ளது. பாவேந்தரின் வாழ்வியல் நிகழ்வுகளை உள்ளபடியே படம்பிடித்துக் காட்டுகிறது. வாழ்வில் இணைந்திருந்த பாரதி முதலான பிற கவிஞர்கள் பற்றியும் தெள்ளத் தெளிவான தமிழில் காட்டியுள்ளார்.
சிலப்பதிகாரத்தை உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்பது போல் இந்தக் காவியத்தையும் குறிப்பிடலாம். தேவைப்படும் இடங்களில், பாரதிதாசனின் உரைநடையையும் இணைத்து வழங்கியுள்ளார்.
பாரதியும் பாரதிதாசனும் இணைந்திருந்த தன்மையை, ‘தாரதுதான் தரையோடே ஒட்டினாற்போல் தமிழாலே இருவருமே ஒட்டிக்கொண்டார்...’ என புதுப்புது உவமைகள் காணப்படுகின்றன. அனைவரும் புரிந்து கொள்ளும் அளவு எளிமையாக அமைந்த பெருங்காப்பியம் தமிழுக்குத் தனி மகுடம்.
– முகிலை ராசபாண்டியன்