பற்றில்லாத நிலை என்பது தன்னை மறத்தல். உடம்பை, உணவை மறந்து போதல். தெய்வக்குழந்தையாக பிறந்து வளர்ந்த ஸ்ரீசேஷாத்ரியும் அந்த நிலையை இளம்வயதிலேயே அடைந்தார்.
பதின்ம வயதில் தந்தை, தாத்தாவை இழந்து பின்னர் தாயை இழந்த நிலையில், தாய் சொன்ன அருணாச்சலம் என்ற வார்த்தையை மட்டும் பற்றுக்கோடாக கொண்டார். உணவை மறந்த உடல் நலிந்தாலும் அருணாச்சல மந்திரத்தால் உள்ளம் உறுதியடைந்தார். அப்படியே ஊருக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.
சேஷாத்ரி கதையை படிக்க படிக்க கண்ணீர் ஊற்றாய் பெருக்கெடுப்பது உண்மை. பக்தியும், தெய்வ வழிபாடுமாக வேறெந்த சிந்தனைகளும் இல்லாத ஒரு தெய்வக்குழந்தையை பெற்று வளர்ப்பது என்பது எவ்வளவு பெரிய கொடுப்பினை என்பது பிரமிப்பை ஏற்படுத்தும்.
ஆனாலும், மகன் திருமணம் செய்து கொள்ளாததால் ஏற்படும் ஏக்கம், சாவை வரவழைப்பது போன்ற வலியை ஏற்படுத்துகிறது. கதையை படிக்கும்போது சேஷாத்ரி தவிர வேறெந்த உணர்வும் ஏற்படாது.
–
எம்.எம்.ஜெ.,