மாட்சிமை பெற்ற மனிதர்களின் வாழ்க்கை நிகழ்வுகளைப் பற்றிய நுால். பல்வேறு துறை சார்ந்த புகழ்பெற்ற 96 பெருமக்களைச் சுருக்கமாகப் படம்பிடித்துக்காட்டுகிறது.
நாட்டிற்கு நல்வழி காட்டியவர்களின் தரிசனத்தை உணரலாம். காந்தி, நேரு, காமராசர் துவங்கி, அலெக்ஸாண்டர், நெப்போலியன் என உலக வரலாற்றில் இடம்பெற்ற பெருமக்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில நிகழ்வுகளை இரண்டு மூன்று பக்கங்களில் எளிமையான நடையில் எழுதியுள்ளார்.
பெருமக்களின் அரிய சாதனைகளை அறிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் போற்றுதலுக்குரியது. சிறுவர்களும், கல்லுாரி மாணவர்களும் கட்டாயம் படித்துணரவேண்டும் என்ற கருத்தை எழுப்பும் விதத்தில் அமைந்துள்ளது. அரியதொரு தகவல் களஞ்சியமாக விளங்குகிறது.
– இராம.குருநாதன்