கோவை வானொலி நிலையத்தில் ஒலிபரப்பப்பட்ட நாடகங்கள் ரகசியம், டைப்பிஸ்ட் பூங்காவனம், வீட்டுக்குள் ஒரு சினிமா ஆகியவை நுாலாக்கம் பெற்றுள்ளன. எழுதப்படும் நாடகம், மேடையில் உடலசைவுகள், வசனம், காட்சி, அமைப்பு, ஒப்பனை, ஒலிகள் ஆகியவற்றைக் கொண்டு நடிகர்களால் நிகழ்த்தப்படுகிறது.
நாடக இலக்கியம் என்பது கரு, பாத்திரம், கால அளவு, கட்டமைப்பு, காட்சி அமைப்பு, தொடக்கம், குறிப்பு, வசனம், முடிவு, தலைப்பு, உத்திகள் என அமைகிறது. இவற்றை மீறி இத்தனை செயல்களையும் மனத்திரையில் கொண்டு வருகிறது இந்த நாடக நுால்.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்