பகவன் என்றால் புத்தன். பகவான் என்றால் இந்து மதக் கடவுள். பகவன் புத்தர் உருவ வழிபாட்டை விரும்பாதவர். கருத்துச் சுதந்திரத்தை ஆதரித்தவர். புத்தம் பலவித கருத்துக்களை சொல்லி நிற்கிறது. அதில் தேர்ந்த தெளிந்த கருத்துக்களை தொகுத்து நுாலாக்கப்பட்டுள்ளது. மனைவியைப் பற்றி, அழகில் கர்வம் கூடாது, ஆடம்பரம் பகட்டு கூடாது, சகோதரி போல அன்பு காட்ட வேண்டும், எல்லா உயிர்களிடமும் தாயைப் போல பரிவு காட்ட வேண்டும், ஆடம்பர தேவைகளில் ஆர்வம் காட்டக்கூடாது என போதனைகள் உள்ளன. – சீத்தலைச் சாத்தன்