கொடியது கொரோனா; உலகையே முடக்கிப் போட்டுள்ளது. முதலாளித்துவம் செய்து வருகிற கொடுஞ்செயல்களைப் பற்றியும், தேசங்களுக்கு இடையிலும், மதங்களுக்கு இடையிலும் மோதலை ஏற்படுத்தும் மரண வியாபாரிகளின் தந்திரங்களைப் பற்றியும் விவாதிக்கிறது.
முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடி, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, 200 ஆண்டுகளாக வணிகச் சுழற்சியாக வந்து கொண்டுள்ளது. வறுமை, பசி, பட்டினியால் வாடும் மனிதரை, கொரோனா நச்சுக் கிருமியும் தாக்கத் துவங்கி விட்டது. பயங்கரவாதம் போன்றே கொரோனாவும் மனித குலத்தின் பொது எதிரி என்று சான்றுகளுடன் விளக்குகிறார்.
மரணப் படுக்கையிலிருந்து உயில் போல் எழுதியுள்ளார்.
– முனைவர் மா.கி.ரமணன்