ஜெய்சங்கர் என்னும் திரைக் கலைஞனின் முழுப் பரிமாணமும் வெளிப்படும் வகையில் படைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் பிறந்த சங்கர், சென்னையில் ஜெய்சங்கர் ஆனது வரை உள்ள நிகழ்வுகள், சோர்வு ஏற்படாத வகையில் படைக்கப்பட்டு உள்ளன.
இரவும் பகலும் என்னும் திரைப்படம் துவங்கி, 300 படங்களுக்கு மேல், ஜெய்சங்கர் நடித்துள்ளார் என்னும் தகவலைத் தொகுத்துத் தந்துள்ளார். வெற்றிப் பயணத்தை மட்டும் வெளிப்படுத்தாமல், அவர் திரைப்பட நடிகர் ஆவதற்கு எடுத்த, விடாமுயற்சியை உள்ளது உள்ளபடி தரப்பட்டுள்ளது.
அரசியல் துறையில் ஜெய்சங்கருக்கு இருந்த ஈடுபாட்டையும், பத்திரிகைகளுக்கு அவர் வழங்கிய பேட்டிகளையும் இணைத்திருப்பதால், புத்தகத்தின் உண்மைத் தன்மை கூடுகிறது. கலையுலகைச் சேர்ந்த ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ள, எல்லாருக்கும் ஆர்வம் இருக்கும். அந்த ஆர்வத்தைக் கூட்டும் வகையில் அழகிய படங்களை இணைத்துத் தயாரிக்கப்பட்டுள்ளது.
– முகிலை ராசபாண்டியன்