ஈழத்தில் பிறந்து, தமிழகத்தில் முறையாகத் தமிழ் ஆய்வு மேற்கொண்டு, மலேஷியாவில் பேராசிரியராக வீற்றிருந்தவர் சேவியர் தனிநாயகம் அடிகளார். பன்மொழிப் புலவராகவும், பன்னாட்டுத் தமிழ்த் துாதராகவும், உலகத் தமிழாய்வு மன்ற நிறுவனராகவும், உலகத் தமிழ் மாநாடுகளின் அமைப்பாளராகவும், தமிழ்ப் பண்பாடு என்னும் ஆங்கில முத்திங்கள் இதழின் ஆசிரியராகவும் விளங்கியவர்.
ஐரோப்பியப் பல்கலைக் கழகங்கள் பலவற்றில் தமிழ் ஆய்வுச் சொற்பொழிவுகள் ஆற்றியவர். அவரது அரும் பணிகள் பற்றிச் சொல்லும் நன்னுால். தேவநேயப் பாவாணர், மயிலை வேங்கடசாமி, பேராசிரியர் வ.சுப.மாணிக்கம் போன்றோரின் சீரிய தமிழ்ப் பணிகள் குறித்தும், அரிய செய்திகளை காணலாம்.
– எஸ்.குரு