நவீன ஆற்றுப்படை இலக்கியமாய் அமைந்த நுால். புற்று நோயால் அவதியுறும் மனிதர்கள் மீட்டெடுத்துக் கொள்ள வழிகாட்டியாக விளங்குகிறது.
ஒரு மனிதனின் நற்பண்புகளையும், திறமைகளையும், அறிவாற்றலையும், தொண்டுள்ளத்தையும் வாழும் காலத்திலேயே போற்ற வேண்டும். பிறருக்கும் எடுத்துக் காட்ட வேண்டும் என்னும் பரந்த நோக்கில் எழுதப்பட்டுள்ளது.
முடக்கு நீக்கு நிபுணராகப் புதுவை ஜிப்மரில் பணியாற்றி வரும் கி.மதிவாணனின் பன்முகப் பாங்கைப் பாராட்டும் விதமாக இந்நுாலைப் படைத்து உள்ளார்.
மதிவாணன் தனக்கு ஏற்பட்ட மலக்குடல் புற்று நோயைப் புறந்தள்ளி, எவ்வாறு வெற்றி கண்டார் என்பதையும், புற்று நோய்க்கு ஆளான மனிதர்கள் மீள என்னென்ன வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்பதையும், அதற்காக ஆற்றிய தொண்டினையும் விறுவிறுப்பான நடையில் சொல்லிச் செல்கிறது நுால்.
– ராமலிங்கம்