ஐரோப்பாவில், 1859ல் பெரும் புரட்சியை ஏற்படுத்திய முக்கியமான அறிவு நுாலின் தமிழாக்கம். இயற்கையியல் ஆய்வின் அடிப்படை நுால். மூலத்தை வரிக்கு வரி மொழிபெயர்க்காமல், மையக் கருத்தின் விவாதப் பொருள் சுருக்கமாக தரப்பட்டு உள்ளது.
விலங்குகளும், தாவரங்களும் சுற்றுச்சூழலுடன் கொண்டுள்ள உறவு பற்றி புலனுணர்வை துாண்டும். அறிவியல் ரீதியான தேடலை உருவாக்கும். இன்று விவாதமாகியுள்ள சுற்றுச்சூழல் பற்றிய கவனிப்புக்கான அடிப்படை சிந்தனையைத் துாண்டும்.எளிய நடையில் அமைத்து உள்ளார் ராஜ் கவுதமன். தமிழில் வந்துள்ள முக்கிய அறிவுக் களஞ்சியம்.