சித்த மருத்துவத்தில் ஓரிரு மூலிகைகளைப் பயன்படுத்தி, நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் சிடுகா மருத்துவமுறைகள் எளிய நடையில் தரப்பட்டுள்ளன.
ஒவ்வொரு நோயையும் தலைப்பாகத் தந்து, நோய்களுக்கு மருந்து உருவாக்கிப் பயன் கொள்ளும் செயல்முறைகளைத் தந்து, நோய்களுக்கான காரணங்களும், பல நோய்களுக்கு மூலிகை சார்ந்த எண்ணெய்களின் பயன்களும் விளக்கப்பட்டுள்ளன. பல்வேறு மருத்துவ முறைகளில் அன்றாட வாழ்வில் நுகரும் அரிய கனிகள், கீரைகள், கிழங்குகள் மற்றும் மூலிகைகளின் அளப்பரிய பங்கை அறிய முடிகிறது.
மிகவும் பரவலாக மக்கள் பாதிக்கப்படும் மஞ்சள் காமாலை, நரம்புத் தளர்ச்சி, வாதம், பித்தம், புண்கள், இருமல், தோல் நோய்கள் போன்றவற்றை மிகக் குறைந்த செலவில் சித்த மருத்துவத்தில் குணமாக்கக்கூடிய வாய்ப்புகள் இருப்பது தெரிகிறது. பல நோய்களுக்கான மூலிகைகள் மற்றும் மருத்துவப் பொருட்கள் பொதுவாக அறியப்பட்டவையாகவே தோன்றுகின்றன.
அன்றாடம் காணும் வாழை, வல்லாரை, வில்வம், முருங்கை, கடுக்காய், காட்டு மல்லிகை, ஆவாரம் பூ, துளசி, தும்பை, இஞ்சி, மிளகு, சுக்கு, பால், தேன், சர்க்கரை போன்ற பலவற்றிலும் உள்ள வியத்தகு மருத்துவ குணங்கள் விவரிக்கப்படுகின்றன. சித்த மருத்துவம் சார்ந்தவர்கள் புரிந்து பயன் பெறக்கூடிய நுால்.
–
மெய்ஞானி பிரபாகரபாபு