‘தினமலர்’ உட்பட இதழ்களில் கொரோனா குறித்தும், விழிப்புணர்வு ஏற்பட வேண்டியதன் அவசியம் குறித்தும், தடுப்பூசியின் தேவை பற்றியும் எழுதி குவித்தவர் டாக்டர் கணேசன்.
இவரது கைவண்ணத்தில், 51 கட்டுரைகளின் தொகுப்பு நுால். கொடிய தொற்றின் அத்தனை அம்சங்களையும் எளிய தமிழில் அலசியுள்ளார்.
கொரோனா குறித்த சந்தேகங்களுக்கு பதில் இந்த நுாலில் இருப்பது ஆச்சரியம். ஒரு பதிலையும் விட்டு வைக்காமல் முழுமையாக எழுதியிருக்கிறார். நோய் பற்றி முழுமையாக எழுதப்பட்டிருப்பதால், இது மருத்துவ நுால் என எண்ணத் தோன்றும்.
மருத்துவ வார்த்தைகளால் எழுதாமல் புரியும் விதத்தில், எளிய தமிழில் விளக்கி இருப்பது நுாலின் சிறப்பு. உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் வைரஸ் பற்றி புரிந்து, எச்சரிக்கையோடு உயிர் வாழ வழிகாட்டும் கையேடு இது. வீடுகளில் சானிடைஸர், முக கவசம் வைத்திருப்பது போல, இந்த புத்தகத்தையும் வைத்திருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
– ஜி.வி.ஆர்.,