எட்டு சிறுகதை தொகுப்பு இந்நுால். சில கதைகள், மாத இதழ்களில் வெளிவந்துள்ளன. குறுங்கதைகளும் இடம் பெற்றுள்ளன. பிரச்னைகள், பெண்களின் இயல்பான பண்புகள்,வெறுப்பு, வன்மம், சமகால பிரதிபலிப்பு, விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை தரம் போன்றவற்றை, உளவியல் பார்வையோடு கதைகளில் விவரிக்கிறார் நுால் ஆசிரியர்.
‘யானைகளை விரட்ட, தாரைத் தப்பட்டைக்காரர்களை கூப்பிட போயினர்; யாரும் அகப்படவில்லை; பெரிய பெரிய பட்டாசு வெடித்தனர். திருமணம் செய்தோம், விவாகரத்து பெற்றோம்; மீண்டும் ஒரு திருமண நாளில் சந்தித்தபோது, விவாகரத்து வலி தெரிந்தது’ போன்ற குறுங்கதைகளை, கவிதை வரிகளில் கூறிய விதம் புதுமையாக இருந்தது. கதை எழுத துடிப்பவர்கள் வாசிக்க வேண்டிய நுால்.
– டி.எஸ்.ராயன்