கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து, கல்வி அறிவால் உயர்ந்த கணித ஆசிரியரின் சுயசரிதை நுால். ஏழு பாகங்களாக எழுதப்பட்டுள்ளது. முதல் பாகம் சொந்த வாழ்க்கை, பொது வாழ்க்கை என பிரிக்கப்பட்டுள்ளது.
பொது வாழ்வில் மறைந்த கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஜீவா மற்றும் தலைவர்களுடன் ஏற்பட்ட அறிமுகம், கட்சியுடனான தொடர்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. கணித ஆசிரியராக பணிபுரிந்தது, ஆசிரியர் உரிமைக்காக போராட்டங்கள் நடத்தியது மட்டுமின்றி, சுலபமாக கணித சூத்திரங்களை மாணவர்கள் மனதில் ஏற்றும் எளிய நடைமுறையை உருவாக்கியது பற்றியும் விபரமாக எழுதியுள்ளார்.
வாழ்வின் சாதனைகள் பற்றி குறிப்பிட்டுள்ளார். பன்னாட்டு உறவுகள், வெளிநாட்டு பயணங்கள் பற்றிய விபரங்களும் படங்களுடன் உள்ளன. வாழ்வின் முக்கிய சம்பவங்களின் படங்களும் ஆங்காங்கே தொகுக்கப்பட்டுள்ளன. நம்பிக்கையை ஏற்படுத்தும் வாழ்க்கை சரிதம்.