சிறுவர்களுக்கு நல்லறம் போதிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். பண்பாட்டை உயர்த்தும் வண்ணம், 100 கதைகள் உள்ளன. புகழ் பெற்ற வானொலி நிகழ்ச்சிகளை வழங்கிய வானொலி அண்ணா எழுதியவை தொகுத்து வெளியிடப்பட்டுள்ளன.
முதல் கதையே, ‘உழைத்து வாழ வேண்டும்’ என்ற தலைப்பில் அமைந்து உள்ளது. அனைத்து கதைகளும் நேரடியாக கேட்பது போன்ற தொனியில் எழுதப்பட்டுள்ளன. மிகவும் எளிய மொழி நடையில் சொல்லப்பட்டுள்ளன.
உழைப்பு, அறத்துடன் வாழ்தல் போன்றவற்றின் மேன்மையை பறை சாற்றுவதாக கதைகள் அமைந்துள்ளன. கதைகளுக்கு மனம் கவரும் வகையில் அழகிய ஓவியங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
கதைகளின் முடிவில், அதன் மையக் கருத்துடன் தொடர்புள்ள அற போதனை இயல்பாக இணைக்கப்பட்டுள்ளது. அவை, தமிழ் அற இலக்கியம் மற்றும் பழமொழிகளில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளன. எளிதாக புரியும் வகையில் எழுதப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கு அறம் கூறும் தொகுப்பு நுால்.