கட்டுரை, சிறுகதை, மரபு, புதுமை என அனைத்துக் கலவையாக திகழ்கிறது இந்நுால். முதலாவது பகுப்பான என் பூமி சொற்பொழிவுடன் துவங்குகிறது. இதில் சில சிறுகதைகளாகவும், சில கட்டுரைகளாகவும் உள்ளன. இரண்டாம் பகுப்பான என் வானம், தொ.பரமசிவம், வள்ளுவம், தொல்காப்பியம் என இலக்கிய, இலக்கணத்தைப் பேசுகின்றன. இயல்பான நடை, மொழிப்பற்று, ஜாதி பேதமற்ற போக்கு இவை தனித்தன்மைகளாக வெளிப்படுகின்றன.
இலக்கியக் கருத்துகளிலும் நகைச்சுவை கலந்து சுவைக்கச் செய்துள்ளது, ‘தும்மல்’ பற்றிய கட்டுரை. கண்ணகி மூட்டிய தீயையும், அனுமன் மூட்டிய தீயையும் ஒப்பிட்டு எழுதிய ‘எரிதழல்’ சிந்திக்க வைக்கிறது. அறிந்து கொள்ளவும், சிந்திக்க வைக்கவும் செய்திகளைத் தாங்கியுள்ளது.
– முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்