உலகம் முழுதும் வரலாற்றில் தமிழர்கள் பதித்துள்ள தடயங்களை, கூர்ந்து நோக்கி பெருமை மிக்க செயல்களை எடுத்து சொல்லும் நுால். வரலாற்று சுவடுகளின் அடியொற்றி, தேடலுடன் நுணுக்கமாக ஆய்ந்து தொகுக்கப்பட்டுள்ளது.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய எகிப்து மன்னர் தமிழரா, என்ற கேள்வியை முன் வைத்து துவங்குகிறது புத்தகம். மெக்சிகோ – தென் அமெரிக்கா 16 ஆயிரம் கிலோமீட்டர் துாரத்தைக் கடந்து சென்றது எப்படி என்ற கேள்விக்கு விடை தேடுவதுடன், 39 அத்தியாயங்கள் உள்ளன. உண்மைகளை காணும் வகையில் அமைந்துள்ளது.
நுாலின் ஆதார தகவல்கள், பழங்கால கல்வெட்டுகள், கட்டடக்கலை, எழுத்துக்களை தாங்கி நிற்கும் மண்பாண்ட ஓடுகள் போன்றவற்றில் இருந்து தேடப்பட்டுள்ளது. மிக சுவாரசியமாக தொகுத்து எழுதப்பட்டுள்ளது.
புத்தகத்தின் எளிய நடை அனைவரையும் ஈர்க்கும் வகையில் உள்ளது. பழங்காலத்தில் தமிழர்களின் சாகசங்களை, பெருமைகளை பெருமிதத்துடன் எடுத்து கூறும் வகையில் அமைந்துள்ள நுால்.