சினிமாவின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் இடத்தில் திரைக்கதை உள்ளது. ஒரு வலுவான கதையை, திரைக்கதை தான் சுவாரசியப்படுத்தும். இதை விவரிக்கிறது இந்த நுால். குறும்படம், முழுநீள சினிமா இரண்டிற்கும் திரைக்கதை எப்படி எழுத வேண்டும்; தயாரிப்பாளர், நாயகன், நாயகி ஆகியோரிடம் கதை சொல்லும் முறை குறித்து அறிய முடிகிறது.
கதை தேர்வு, சொல்லும் நுணுக்கம், காட்சி விவரிப்பு, மெருகேற்றல் உள்ளிட்ட 31 தலைப்புகளில், நுால் ஆசிரியர் விளக்குகிறார். சினிமாவில் முதல் காட்சி என்பது, கதையின் முடிவை போல் முக்கியத்துவம் வாய்ந்தது என குறிப்பிடுகிறார்.
திரும்ப திரும்ப எழுதுகிறபோது திரைக்கதை மெருகேறும் என பல வழிகாட்டும் விதிகள் இந்நுாலில் உள்ளன. குறும்படம், முழுநீள சினிமா இயக்க துடிப்போர் வாசிக்க வேண்டிய நுால்.
– டி.எஸ்.ராயன்