செருப்பு தைக்கும் தொழிலாளியின் வாழ்க்கையுடன் துவங்கும் இந்தச் சிறுகதைத் தொகுப்பு, விவசாயத் தொழில் செய்யும் ஏழைக் குடும்பத்துடன் நிறைவடைகிறது.
செருப்பு தைக்கும் தொழிலாளி, தன் மகன் இதே தொழிலைச் செய்து சிரமப்படக் கூடாது என்று கவலைப்படுகிறான். விவசாயத் தொழில் செய்யும் வேலாயி, தன் மகன் வயலை விற்கப் போவதை நினைத்து உயிரை விடுகிறாள்.
தொழிலாளர் வாழ்க்கையை உற்றுப் பார்த்து, ஒவ்வொரு நிகழ்வையும் தன் எழுத்தில் நெசவு செய்திருக்கிறார் கிருத்திகா. உப்புச்சுமை என்ற கதை, உப்பு கரைவதைப்போல் நம் சுமைகளைக் கரைக்கிறது. முதியோர் காப்பகத்திற்கு வரும் முதியோரின் எண்ணங்களையும், வாழ்க்கைச் சூழலையும் எடுத்துரைக்கிறது.
பத்தொன்பது சிறுகதைகளைக் கொண்ட இந்தத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு சிறுகதையும், நமக்கு ஒவ்வோர் உலகத்தைக் காட்டுகின்றன.
– முகிலை ராசபாண்டியன்