இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்ரிபாய் பூலேயின் வாழ்க்கை வரலாறு, கதை வடிவில் சித்தரித்து எழுதப்பட்டுள்ளது. எளிய உரையாடல் மூலம் நகர்கிறது. பெண்களுக்கான உரிமையை நுட்பமாக விவரிக்கிறது.
கதைக்கு தக்கவாறு வண்ண ஓவியங்கள் புத்தகத்தை அலங்கரிக்கின்றன. அவை பொருத்தமான இடங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. சிறுவர் – சிறுமியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. தரமான காகிதத்தில் தெளிவான அச்சில் தயாரிக்கப்பட்டு உள்ளது.