பகவத் கீதையை படித்தறியும் வண்ணம், ஸ்லோகங்களை தமிழாக்கி பொருள் விளக்கத்துடன் வெளிவந்துள்ள நுால். மிகவும் எளிய நடையில் புரியும் வண்ணம் பதவுரை மற்றும் விளக்க உரை எழுதப்பட்டு உள்ளது.
புத்தகத்தில், முதலில் சமஸ்கிருத ஸ்லோகங்களை பிரித்து புரியும் வண்ணம் தமிழில் அச்சிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, அந்த ஸ்லோகங்களை தனித்தனியாக பிரித்து, தமிழில் உரிய பொருள் தரப்பட்டுள்ளது. மிக எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் பதவுரையாக அவை அமைந்துள்ளன.
தொடர்ந்து, அவற்றுக்கான விளக்க உரை மிக அருமையாக தரப்பட்டுள்ளது. சாதாரணரும் புரிந்து கொள்ளும் வகையிலான சொற்கள் கையாளப்பட்டுள்ளன. விளக்கங்கள் நேரடியாக சொல்வது போல் அமைந்துள்ளன. கீதையை புரிந்து படிக்க வசதியாக தயாரிக்கப்பட்டுள்ள நுால். வனப்பாக உள்ளது. ஆன்மிக அன்பர்களுக்கு பொக்கிஷமாக விளங்கும்.