சைவமும், வைணவமும் இறைவன் ஒன்றே என்ற கோட்பாட்டைக் கூறுகின்றன. இந்நுாலில், இறைவனுக்கு மலர் வழிபாடு செய்தலே பூஜை என்று கூறுகிறது. வைணவ ஆகமங்களாக வைகானசம், பாஞ்சராத்திரம் என்ற வழிபாட்டு நெறிமுறைகள் உள்ளன. பரம், வியூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை என்ற ஐந்து நிலைகளில் இறைவன் தன்னை வெளிப்படுத்துகிறான்.
இறைவனின் 10 அவதாரங்களை விளக்கியும், அவதாரக் கோட்பாடுகள் மனித இனம் தன் நிலை உணர்ந்து சிறந்த லட்சியங்களுடன் வாழ்வதற்கு உறுதுணையாக உள்ளன என்றும் விளக்குகிறது இந்த நுால்.
வசிட்டாத்வைத தத்துவத்தை விளக்கியும், ஆன்மா, உலகு, முக்திநிலை ஆகியவற்றை விளக்கிக் கூறும் செய்திகள் பிரமிக்கச் செய்கின்றன. இறுதியில், ஹிந்து தர்மம் என்ற தலைப்பில் வினா – விடையாக விளக்கம் தருவது, படிப்போருக்கு இன்பம் தரும்.
– டாக்டர் கலியன் சம்பத்து