கொரோனா தொற்றின் துவக்கம் முதல், எட்டாம் கட்ட ஊரடங்கு வரை நோய் பரவலையும், பாதிப்புகளையும் விளக்குகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய – மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளைக் கால வரிசையில் விவரிக்கிறது. வணிக நிறுவனங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், தகவல் தொழில் நுட்ப அலுவலகங்கள் செய்த மாற்று ஏற்பாடுகள் பற்றி விவரிக்கப் பட்டுள்ளன.
எல்லா ஊடகங்களிலும் கொரோனாவின் பெயர் தான் பிரதானமாகக் காணப்படுகிறது. கைகளை சோப்பு போட்டு கழுவுதல், முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளி என ஓயாமல் ஒலித்திடுதே, உயிர் காக்கும் மந்திரமாய் என்று கவிதை வாயிலாக விளக்குகிறார். அறிவார்ந்த அனைத்து தகவல்களையும் நுால் தருகிறது. கொரோனாவைப் பற்றியும், கொரோனா காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் கூறுகிறது.
– பேராசிரியர் இரா.நாராயணன்