வேளாண்மையை தொழிலாகக் கொண்ட தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தில் பரம்பரையாக செவிவழிச் செய்தி கதைகளை புரிந்து, ஆய்வு ஏடுகளுக்கு பயன்படுத்திய பெருமக்களின் குறிப்புகளோடு வெளிவந்திருக்கும் நுால்.
நெல்லை முதலில் பயிராக கண்டவர்கள் என்பதுடன், தேவர்களின் தலைவன் தேவேந்திரன் தான் மழை மற்றும் உழவுத் தொழிலின் கடவுள் எனச் சொல்கிறது. அதனால் தான் பல பிரிவுகளாக பிரிந்திருந்தாலும், தேவேந்திரகுல வேளாளர் எனும் பொதுப் பெயரில் அழைக்கப்படுகின்றனர். வட்டார வழக்கு மொழிச்சொற்களில் அமைந்துள்ளது சிறப்பு.
– சீத்தலைச்சாத்தன்