மொழி, தொல்லியல் ஆய்வாளர், மானுடவியலாளர், சமய போதகர் எனப் பன்முகம் கொண்ட அறிஞர் ராபர்ட் கால்டுவெல் ஏழை மக்களின் விடியலுக்கான களப்பணி, போதனை விளைவுகளை விவரிக்கும் அரிய சொற்பொழிவுகள் அடங்கிய வரலாற்று நுால்.
உரிமை மறுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களை, அறியாமையின் பிடியிலிருந்து மீட்பதில் வாழ்நாளை கரைத்த கால்டுவெல்லின் சொற்பொழிவுகள், தமிழ் மண்ணில் நிலவிய கொடுமையான சமூக அவலநிலையைத் துலக்கமாகக் காட்டுகின்றன.
இந்தியச் சமூகத்திடையே நிலவிய முரண்களையும், இணக்கமின்மையையும் சுட்டி, மிகவும் ஒடுக்கப்பட்டவர்களாகக் கருதப்பட்ட மக்கள், பனைத் தொழில் செய்தவர்கள் மற்றும் நலிந்த பிரிவினர் கோவிலுக்குள்ளும், நீதிமன்றங்களுக்குள்ளும் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட சமூக அவலம் காட்சிகளாக விரிகின்றன. கால்டுவெல்லின் பணிகளை ஆவணப்படுத்தும் முயற்சியாக வெளிவந்திருக்கிறது. ஆய்வு நோக்கில் படிக்க வேண்டிய நுால்.
– மெய்ஞானி பிரபாகரபாபு