நாட்டுப்புறப் பாடல்களான கிராமியப் பாடல்களைத் தொல்காப்பியர் சேரிமொழி என்று குறிப்பிடுவார். தொழிற்பாடல்களின் தோற்றம், பண்ணைப் பாடல்கள், பண்ணைப் பாடல்கள் காட்டும் சமூக வாழ்க்கை, உழவுப் பாடல்களும் சாதி இறுக்கங்களும், உழவுப் பாடல்களும் பெண்களும் ஆகிய ஐந்து பகுதிகளைக் கொண்டுள்ளது இந்த நுால்.
உழவர் பெருமக்களின் சமூக வாழ்க்கையையும், உழத்திப் பெண்கள் பாடும் பாடல்களையும் விளக்கமாக எடுத்துரைத்துள்ளார். பெரும்பாலும் கொங்கு நாட்டின் உழவுப் பாடல்களை மையமிட்டதாகவே தொகுக்கப் பட்டுள்ளது. ஆசிரியரின் அரிய முயற்சி பாராட்டத்தக்கது.
– ராம.குருநாதன்