மாணிக்க வாசக சுவாமிகள் அருளிய சிவபுராணம் நாலுக்கு விளக்கவுரையாக வந்துள்ள நுால்.
புத்தகத்தின் முதலில், சிவபுராணம் முழுமையாக தரப்பட்டுள்ளது. அடுத்து, பாடல்களை முறையாக பிரித்து தனித்தனியாக விளக்கம் தரப்பட்டுள்ளது. பாடல்களை எளிமையாக புரிந்து, விளக்க உரையை வாசிப்பதற்கு சுலபமாக ஒழுங்கமைக்கப்பட்டு உள்ளது.
இறைவன் எக்காலத்திலும் எல்லா இடத்திலும் எல்லாமாகவும், எல்லாராகவும் இருக்கிறான். ஆனால், எக்காலத்திலும் முழுமையாக அறியப்படாமலும் இருக்கிறான். அறிய முயல்பவன், அறியப்படுவதின் ஓர் அங்கமாகவே இருப்பதே இதற்கு காரணம் என குறிப்பிட்டு, உரையைத் துவங்குகிறார்.
விளக்கவுரை மிகவும் எளிமையாக குழப்பமின்றி புரிந்து கொள்ள ஏதுவாக உள்ளது. பிற்காலத்தில் தோன்றிய ஞானிகளின் கருத்துகளையும் இதனுடன் அலசியுள்ளார் நுாலாசிரியர். ஞான பாரம்பரியத்தை எளிய முறையில் விளக்கும் நுால்.
– பாவெல்