இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. போரால் பாதிக்கப்பட்டு புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் நாடு திரும்பவில்லை. இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கை தமிழர்களின் துயரங்கள் குறித்து எழுதப்பட்டுள்ள நுால்.
உலக அகதிகளின் நிலவரம், இந்திய நாடு எதிர்கொள்ளும் அகதி பிரச்னை, உலகெங்கும் வாழும் இலங்கை தமிழ் அகதிகள், மொழி சார்ந்த நல்லிணக்கத்துக்கு தடையாக உள்ள போட்டி அரசியல் என பல கருத்துகளை அலசுகிறது.
இந்திய வம்சாவளி அகதிகள் எதிர்கொள்ளும் தனித்துவமான துயரங்கள் பற்றியும் விரிவாக அலசப்பட்டுள்ளது. தஞ்சம் புகுவோரின் வாழ்வுரிமை தேவையையும், இந்திய பாதுகாப்பையும் முன் வைத்து, இவற்றை உறுதி செய்கிற தேசிய அகதிகள் சட்டம் பற்றியும் விரிவாக பேசுகிறது. தமிழில் மொழிபெயர்த்துள்ளார் பெர்னார்ட் சந்திரா. துலக்கமற்று இருக்கும் இலங்கை தமிழ் அகதிகளின் துயரம் மீது அக்கறை காட்டும் வகையில் வெளிவந்துள்ள நுால்.
– பாவெல்